செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinothkumar
Last Updated : ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (13:28 IST)

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஊழல் ஊற்றெடுக்கிறது – துரைமுருகன் குற்றச்சாட்டு !

தான் கொண்டுவந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இப்போது ஊழல் ஊற்றெடுப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

வேலூர் சட்டக்கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட மாணவர் தங்கும் விடுதியைத் திறக்க தாமதப்படுத்துவதாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து துரைமுருகன் அந்த விடுதியை மேற்பார்வையிட்டார். பொதுப்பணித் துறை அதிகாரிகளிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறியுள்ளார். மேலும் ஒப்பந்தக்காரர்களிடம் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளதாக கூறினார்.

பின்னர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கூறிய அவர் ‘திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தை கஷ்டப்பட்டு காட்பாடியில் கொண்டுவந்தேன். இப்போது அங்கு புதிய புதிய துணைவேந்தர், பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எந்த விஷயத்தையும் என்னிடம் சொல்வதில்லை. மேலும் அங்கு பல வழிகளில் ஊழல் ஊற்றெடுப்பதாக எனக்குத் தகவல் வருகிறது’ என கூறினார்.