ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (15:32 IST)

தமிழில் பெயர் வைக்காத திமுகவினருக்கு துரைமுருகன் ’குட்டு ’

தமிழகத்தில், தமிழை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமை திமுகவையே சாரும்.  அண்ணாவில் வழியில் அவருடைய தம்பிகள் 40 பது, 50, 60-களில் தமிழகமெங்கும் உணர்ச்சிப் பூர்வமான தம் பேச்சினால் மக்களைக் கட்டிப்போட்டனர். 
தமிழில் பெயர் வைத்து, உலகில் உள்ள எந்த மொழிகளுக்கும் சற்றும் சளைத்ததல்ல என்பதை மக்களுக்கு ஊட்டியது திமுக தான்.
 
இப்படியிருந்த திமுகவில் சமீப காலமாக, அதன் தொண்டர்கள் தமிழில் பெயர் சூட்டாமல் உள்ளது குறித்து அவர்கள் மீது விமர்சனம் எழுந்தது.
 
இந்நிலையில், இன்று , சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் , பேராசிரியர் பாலசுப்ரமணியன் என்பவர் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்கிற நூல் வெளீயீட்டு விழா நடைபெற்றது.
 
இதில், கலந்துகொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியவதாவது :
 
ஆங்கிலேயர்கள் தான் நமக்கு ஜனநாயக உணர்வை ஊட்டியது. அப்போது, ஆங்கிலேயர் இல்லையென்றால் நம் நாடு சோமாலியா போல மாறியிருக்கும். 
 
இந்நிலையில் நம் நாட்டில் எதிரிகள் நமக்கு, வேறு உணர்வை உருவாக்கிவருகிறார்கள், அதில் ஒரே மொழி, ஒரே இனம் என்ற கலாச்சாரத்தை பரப்புகிறார்கள். அதை எதிர்க்கும் உணர்வை நாம் பெறவேண்டும். 
 
நமக்கு சுயமரியாதை, தமிழுணர்வு வேண்டும். இப்போது,திமுகவினர் வீட்டில் தமிழ் பெயர்கள் வைப்பதில்லை. பல மொழிகள் கற்றுக்கொள்வது நல்லதுதான் என்றாலும் நம் மொழி உணர்வை நாம் விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.