வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2024 (12:37 IST)

கிருஷ்ணகிரி தொகுதியும் காங்கிரசுக்கு கிடையாதா? துரைமுருகன் பேச்சால் பரபரப்பு..!

duraimurugan
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்ற சில தொகுதிகள் அந்த கட்சிக்கு மீண்டும் கிடைக்காது என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது கிருஷ்ணகிரி தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காது என்றும் அந்த தொகுதியில் திமுக பிரபலம் போட்டியிடப் போவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் செல்லகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் இந்த முறையும் அவர் போட்டியிட விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கிருஷ்ணகிரி தொகுதியில் செல்லகுமாருக்கு சீட் கொடுக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரே கூறி வருகின்றனர் என்பதும் மண்ணின் மைந்தரை தான் இங்கு போட்டியிட வைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துறையை முருகன், கிருஷ்ணகிரி தொகுதியில் கடந்த முறை கூட்டணி கட்சி வேட்பாளர் ஒன்றை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த முறை ஒருவேளை இங்கு திமுக போட்டியிட்டால் வாக்கு வித்தியாசம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். துரைமுருகனின் இந்த பேச்சால் கிருஷ்ணகிரி தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva