செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 அக்டோபர் 2022 (18:30 IST)

ராமர் இலங்கைக்கு நடந்து சென்றார், ராகுல் காஷ்மீருக்கு நடந்து செல்கிறார்: ராஜஸ்தான் அமைச்சர்

Rahul
கடவுள் ராமர் இலங்கைக்கு நடந்து சென்றார் என்றும் மனிதர் ராகுல் காஷ்மீருக்கு நடந்து செல்கிறார் என்றும் இது மட்டுமே இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அமைச்சர் கூறியுள்ளார்
 
ராகுல் காந்தி நடை பயணம் செல்வது கடவுள் ராமர் நடை பயணம் செல்வது போன்றது என்றும் ஆனால் ராகுல் காந்தி பயணத்தில் மக்கள் இணைந்து கொள்வார்கள் என்பதால் கடவுளுடன் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்த மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்
 
ராமர், ராகுல் ஆகிய இருவரது பெயர்களும் ரா வில் தொடங்குவது தற்செயலானது என்றும், பாஜக தலைவர்களுடன் கடவுளை ஒப்பிடுவது போல நாங்கள் ஒப்பிட மாட்டோம் என்றும் கடவுள் எப்போதும் கடவுள் என்றும் ராகுல் காந்தி ஒரு மனிதர் என்றும் அவர் மனிதாபிமானத்திற்கு உழைப்பதை அனைவரும் பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் ராஜஸ்தான் அமைச்சர் பரிதி லால் மீனா இதுகுறித்து கூறிய போது ராகுல் காந்தியின் பாதையாத்திரை வரலாற்று சம்பவம் என்றும் ராமர் அயோத்தியில் இருந்து இலங்கைக்கு நடந்து சென்றார் என்றும் அதேபோல் ராகுல்காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை நடந்து செல்கிறார் என்றும் தெரிவித்தார்
 
Edited by Siva