ராகுல் காந்தி பங்கு இல்லாமல் மத்தியில் புதிய அரசு சாத்தியமில்லை - மல்லிகார்ஜுன கார்கே
ராகுல்காந்தி இல்லாமல் மத்தியில் பாஜக அல்லாத புதிய அரசு சாத்தியமில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி அமைக்க ஒரு சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தேசிய அளவில் கோடிக்கணக்கான தொண்டர்கள் வைத்துள்ள காங்கிரஸ் கட்சி இல்லாமல் பாஜகவை எதிர்ப்பது விஷப்பரீட்சை என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே மோடி அரசு ஆர்எஸ்எஸ் நாட்டை பிளவுபடுத்த முயற்சித்து வருகிறது என்றும் இந்த அரசை அகற்றுவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
ராகுல் காந்தியின் பங்கு இல்லாமல் மத்தியில் பாஜக அல்லாத புதிய அரசு சாத்தியமில்லை என்றும் வரும் 2024 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்
மேலும் மற்ற மாநிலங்களுக்கு சென்று கட்சி தலைவர்களை சந்தித்து வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதலில் தனது மாநிலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Edited by Siva