வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 ஜூலை 2025 (17:57 IST)

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!
அசாம் மாநிலத்தில் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் பயாப்ஸி சிகிச்சைக்காக சென்ற வாலிபர் ஒருவருக்கு, மருத்துவர் தவறுதலாக அவரது பிறப்புறுப்பையே அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிட்டதாக கூறப்படும் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ரஹ்மான் என்ற இளைஞர் தனது பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர் அவரை பரிசோதனை செய்து, பயாப்ஸி பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து, ரஹ்மானை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றபோது, பயாப்ஸி சிகிச்சைக்கு பதிலாக மருத்துவர் அவரது பிறப்புறுப்பையே அகற்றிவிட்டார் என கூறப்படுகிறது.
 
அறுவை சிகிச்சை முடிந்து கண்விழித்தபோதுதான் ரஹ்மான் தனது பிறப்புறுப்பு அகற்றப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து அவர் புகார் அளித்த நிலையில், அவருக்கு பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய மருத்துவர் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்தச் சம்பவத்தில் முதலமைச்சர் தலையிட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவரை உடனடியாக கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Mahendran