புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 ஜனவரி 2021 (09:22 IST)

நைட்டை விட காலையிலதான் விற்பனை செம! – 2020ல் ஆணுறை அதிகளவில் விற்பனை

நைட்டை விட காலையிலதான் விற்பனை செம! – 2020ல் ஆணுறை அதிகளவில் விற்பனை
2020ல் இந்தியாவில் இரவை விட காலை நேரத்தில் அதிகமான ஆணுறை மற்றும் ரோலிங் பேப்பர் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் உணவு பொருட்கள், மருந்துகள் முதற்கொண்டு பல்வேறு பொருட்களை வீடுகளுக்கு ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யும் நிறுவனமாக டன்சோ இருந்து வருகிறது. கடந்த 2020ல் ஊரடங்கினால் ஆன்லைன் டெலிவரி சிலமாதங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் அதிகமாக விற்பனையான பொருட்கள் குறித்து டன்சோ அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் 2020ல் இரவு நேரத்தை விட பகல் நேரத்தில் அதிகமான ஆணுறை மற்றும் ரோலிங் பேப்பர்கள் விற்பனையாகியுள்ளதாக டன்சோ தெரிவித்துள்ளது. மேலும் அதிகமாக இவை விற்பனையான நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தில் ஹைதராபாத்தும், இரண்டாம் இடத்தில் சென்னையும் உள்ளன.