செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : சனி, 2 ஜனவரி 2021 (18:09 IST)

ஆன்லைன் லோன் ஆப் மோசடி: 2 சீனர்கள் உள்பட 4 பேர் சென்னையில் கைது

ஆன்லைன் லோன் ஆப் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக 2 சீனர்கள் உள்பட 4 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவர் சென்னை போலீசின் கந்துவட்டி தடுப்புப் பிரிவில் அளித்த புகாரின் பேரில் ஆன்லைன் லோன் ஆப் நடத்திவந்த நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருவதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நரகத்துக்கு வழி காட்டும் "கடன் செயலிகள்": பின்னணியில் இருப்பது சீனாவா?

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை மெக்டொனால்டு நிறுவனம் கசியவிட்டது அம்பலம்

கைதான இரண்டு சீனர்கள், பாஸ்போர்ட் காலாவதியான பிறகும் இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் இருந்துள்ளனர் என்றும் அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு, அவர்கள் வைத்திருந்த ரூ.2.4கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் ஆன்லைன் லோன் ஆப் பற்றி விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்றும் ஏமாற்றப்பட்டால் உடனே புகார் கொடுக்கவேண்டும் என்றும் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார். ''கைதான இரண்டு சீனர்கள் மற்றும் இரண்டு இந்தியர்களிடம் இருந்து 21 லேப்டாப், 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் லோன் ஆப் நிறுவனங்களில் பெரும்பாலும் சீனர்களுக்கு தொடர்பு உள்ளது,''என்றார் அவர்.