வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 அக்டோபர் 2022 (15:04 IST)

சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி - சீமான்

'தமிழ்நாடு நாள்' அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி நடத்தயிருப்பதாக  சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  நாம் தமிழர் என்ற கட்சி பல தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு குறுப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற்று வாக்குசதவீதத்தை வைத்துள்ளது.

இளைஞர்களைப்பெருமளவு கொண்டுள்ள இக்கட்சி பல  நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறது.

அதன்படி, இந்தி எதிர்ப்புப் பேரணி நடத்தயிருப்பதாக  அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்-;

'தமிழ்நாடு நாள்' அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கவிருக்கும் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக நீங்கள் அனைவரும் பேரெழுச்சியுடன் அணியமாகி வருவதை அறிந்து பெரிதும் மகிழ்கின்றேன்.

தற்போது மழைக்காலம் என்பதாலும், அடுத்து வரும் நாட்களில் சென்னையில் மழைபெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக அறிவிப்புகள் வந்திருப்பதாலும் பேரணிக்கு வருகை தரும் உறவுகள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக குடையும், மாற்று உடையும் மறக்காமல் உடன் எடுத்துவாருங்கள்.

வரலாறு காணாத வகையில் நடைபெறவுள்ள மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் வருகை தரவிருக்கும் எனது பேரன்பிற்குரிய உறவுகளையும், அன்புத் தம்பி, தங்கைகளையும் நேரில் காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.