வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (11:33 IST)

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை

rain
சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதை அடுத்து தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக தமிழகத்தில் சென்னை உள்பட ஒரு சில வட மாவட்டங்களில் ஒரு சில தென் மாவட்டங்களிலும் ஒருசில டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது 
 
இந்த நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
 
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த 12 மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை
 
Edited by Mahendran