1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today petrol and diesel rate at chennai

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

petrol
சென்னையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அதேபோல் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்ததே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் வரை பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும், சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
63.56 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!