செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2020 (16:50 IST)

ஓடும் பேருந்தை ஒற்றைக் கையில் நிறுத்த முயன்ற போதை நபர்…

சென்னை குரோம்பேட்டையில் போதையில் ஒற்றைக் கையில் பேருந்தை நிறுத்த முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில்  குடிபோதையில் ஒரு நபர் அங்கிருந்து பிராட்வே நோக்கிச் சென்ர அரசுப் பேருந்தை தன் ஒற்றைக் கையால் நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

அவர் போதையில் உள்ளது தெரிந்து பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டார்.

மேலும் அந்த நபர் நடுரோட்டில் குட்டிகரணம் அடித்து வாகன ஓட்டிகளைப் போகவிடாமல் அட்டீழியம் செய்தார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.