வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2020 (11:31 IST)

ஏசிபி ஆராதனா கேரக்டரில் தன்யா ரவிச்சந்திரன்: படப்பிடிப்பு தொடங்கியது!

ஏசிபி ஆராதனா கேரக்டரில் தன்யா ரவிச்சந்திரன்: படப்பிடிப்பு தொடங்கியது!
விஜய் சேதுபதி நடித்த கருப்பன் திரைப்படத்தில் நாயகியாக நடித்த தன்யா ரவிச்சந்திரன் அடுத்ததாக எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஏசிபி ஆராதனா என்ற கேரக்டரில் தன்யா ரவிச்சந்திரன் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் பிரத்யேக பயிற்சி எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது எனவும் தன்யா ரவிச்சந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. காவல்துறை அதிகாரியாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் ஒரு குற்ற வழக்கு குறித்து மீட்டிங்கில் கலந்து கொள்வது போன்ற காட்சிகள் என்று படமாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் குறித்து இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கூறிய போது கடந்த மூன்று படங்களையும் நான் கிராமத்து பின்னணியில் இயக்கியிருக்கிறேன். அந்த இமேஜை உடைக்க வேண்டும் என்பதற்காக இந்த படம் முழுக்க முழுக்க நகரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.