புதுச்சேரியில் காரும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி !
புதுச்சேரியில் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் கார் டிரைவர் பலியான சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
புதுச்சேரியில் இருந்து தமிழக அரசுப் பேருந்து, கடலூர் நோக்கி வந்துள்ளது. இந்த பேருந்து கிருமாம்பாக்கம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியானார்.
இதையடுத்து விபத்துப் பகுதிக்கு வந்து டிரைவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. விசாரணையில் ஓட்டுநர் தரங்கம்பாடியைச் சேர்ந்த பத்மநாபன் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குக் காரணம் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுதான் காரணம் என போலீஸ் தரப்பில் கண்டறியப்பட்டுள்ளது.