1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (20:32 IST)

இந்த செய்தியை கேட்டதும் என் வயிறு எரிகிறது: டாக்டர் ராம்தாஸ்

பொங்கல் மற்றும் தீபாவளி என்றாலே பண்டிகை காலம் என்பது ஒருபுறம் இருந்தாலும் இந்த பண்டிகையின்போது டாஸ்மாக் விற்பனை இலக்கை அரசு நிர்ணயிப்பதும், அந்த இலக்கை நிறைவேற்றி காட்டுவதிலேயே குறியாக இருப்பதும் சாதனையாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் கோடிக்கணக்கில் டாஸ்மாக் மதுவை விற்று சாதனை செய்து வருவதாக வைத்துக் கொண்டாலும் அந்த விற்பனையால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற அக்கறை இல்லாமல் அரசு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரூபாய் 500 கோடிக்கு மேல் டாஸ்மாக் விற்பனையை இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இலக்கையும் தாண்டி ரூபாய் 606 கோடி டாஸ்மாக் விற்பனை ஆகியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த டாஸ்மாக் விற்பனை குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில்  ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும். இந்த அவலம் என்று தீரும்