உள்ளாட்சித் தேர்தல் அசம்பாவிதங்களைத் தவிர்க்க…. -டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை !
உள்ளாட்சித் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மூன்று இழுபறிக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்ப்ர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. அடுத்து வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்நிலையில் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் வரும் 25-ம் தேதி மாலை 5 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரையும், 28-ம் தேதி மாலை 5 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2ம் தேதி முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.