வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (21:39 IST)

நான் நினைத்திருந்தால் ஆளுனர் ஆகியிருப்பேன்: டாக்டர் ராம்தாஸ்

நான் நினைத்திருந்தால் எப்போதோ ஆளுநராக ஆகியிருக்க முடியும் என்றும், ஆனால் தனக்கு ஒரு போதும் பதவி ஆசை இருந்ததில்லை என்றும் காடுவெட்டி குரு நினைவு மண்டபத்தை திறந்து வைத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார் 
 
 
தமிழகத்தில் இருந்து தற்போது தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராகியிருக்கும் நிலையில் தான் பாஜகவுடன் பல ஆண்டுகள் நெருக்கமாக இருந்த காரணத்தினால் எப்பொழுதோ தன்னால் கவர்னராகியிருக்க முடியும் என்றும் ஆனால் பதவியை பெற வேண்டும் என்ற ஆசை தனக்கு ஒருபோதும் இல்லை என்றும் கூறினார் 
 
 
மேலும் காடுவெட்டி குரு அவர்கள் மறைந்து விட்டார் என்பதை தன்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவருக்கு திமுகவினர் பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்ததாகவும் பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் காடுவெட்டி குருவின் சொந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்புமணி ராமதாஸ் முன்னின்று செய்வார் என்றும் அவர் உறுதி அளித்தார் 
 
 
பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் தான் நினைத்திருந்தால் தன்னால் கவர்னாராகி இருக்க முடியும் என்று பேசியது தனக்கு கவர்னர் பதவி வேண்டும் என்பதை அவர் மறைமுகமாக தெரிவிக்கின்றாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்