லாபம் பாத்தாச்சு... கூட்டணி தொடருமா? பாமக முக்கிய முடிவு!!

Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (09:19 IST)
இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என பாமக தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. நாடாளுமன்ற தேர்தலில் பாமக போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் ஒப்பந்தத்தின் படி ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. ஆசைப்பட்டது போலவே அன்புமணியும் எம்பி ஆகிவிட்டார். 
 
இந்நிலையில் மீண்டும் அதிமுகவுடனான கூட்டணி நடக்கவிருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தொடருமா என பாமக தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
ஆம், அதிமுகவுடன் தனது கூட்டணியை இரண்டு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பாமக தொடர உள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிக்காக இடைத்தேர்தலும் உள்ளாட்சி தேர்தலும் நவம்பர் மாதத்தில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :