1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dr Ramdoss says about corona virus spread

இவர்கள் பாராட்டத்தக்கவர்கள்: டாக்டர் ராமதாஸ் டுவிட்

கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1300 க்கும் குறைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1300-க்கும் கீழாக 1289 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. சென்னையில் 164 ஆக குறைந்திருக்கிறது. தொடர்ந்து 17 -ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிச்சயமாக நிம்மதியளிக்கும் செய்தியாகும்!
 
தமிழக அரசும், மருத்துவத் துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள் தான் இதற்கு காரணம். முகக்கவசம் அணிந்து இதற்கு ஒத்துழைத்த  மக்களும் இதற்கு காரணம். இவர்கள் பாராட்டத்தக்கவர்கள். அனைவரின் பணியும், ஒத்துழைப்பும் தொடர வேண்டும்
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மக்கள் தந்த மகத்தான பரிசு: உதயநிதி ஸ்டாலின் டுவிட்!