வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (19:10 IST)

நான் கூறி வந்தது உண்மையாகி விட்டது: டாக்டர் ராமதாஸ்

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் ஆதரித்தாலும் தமிழகம் மட்டும் இன்று வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மாநில அரசும் வேறு வழியில்லாமல்  நீட் தேர்வுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது என்றாலும் கொள்கை அளவில் இந்த தேர்வை எதிர்த்து வருகிறது.
 
அதேபோல் பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், பாஜகவின் பல முக்கிய திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தாலும் நீட் தேர்வை மட்டும் எதிர்த்து வருகிறார். இந்த தேர்வு பயிற்சி மையங்கள் என்ற கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வணிகத்திற்காகத்தான் கொண்டு வரப்பட்டதாக அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் இன்று தெரிவித்ததாவது: நாமக்கல் பகுதியில் நீட் பயிற்சி மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 கோடி பணமும், ரூ.180 கோடி வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நீட் பயிற்சி என்பது ரூ.10,000 கோடி வணிகம் என்றும், இதற்காகத் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்றும் நான் கூறி வந்தது உண்மையாகி விட்டது!
 
நீட் பயிற்சி என்பதே இந்தியா முழுவதும் ஒரு வணிகமாகிவிட்டதால் இதற்காகவாது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து வருகிறார்.