புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (15:18 IST)

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நேபாளத்தை விட குறைவு! – உலக வங்கி அறிக்கை

அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை பல நிறுவனங்களை பாதித்துள்ளது. கூடவே ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, பணமதிப்பிழப்பு ஆகியவற்றால் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் சற்று பின்தங்கிவிட்டதால் பொருளாதார வளர்ச்சி மேலும் குறைந்திருப்பதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் உலக வங்கியின் தெற்காசிய மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2019ம் ஆண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2021ல் இது 6.9 சதவீதமாகவும், 2022ல் 7.2 சதவீதமாகவும அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் வங்க தேசம் ஆகியவை இந்தியாவை விட வேகமாக பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.