வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (16:44 IST)

நீட் ஆள்மாறாட்ட வழக்கு – மாணவி சிக்கியது எப்படி ?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தததாக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆபீஸராகப் பணியாற்றி வந்த வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா கைது செய்யப்பட்டார். இவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இது சம்மந்தமாக அந்த மருத்துவ கல்லூரி டீன் அளித்த புகாரின் பேரில்  போலிஸார் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரிடமும் நடந்த விசாரணையில் பிரவீன், சரவணன், இர்பான் உள்ளிட்ட பலர் சிக்கினர். இவர்கள் அனைவரும் மாணவர்களாக இருக்கையில் முதல்முதலாக மாணவி ஒருவர் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கினார். காஞ்சிபுரம் சவிதா மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அம்மாணவியும் அவரின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அம்மாணவி எப்படிக் கைதுசெய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாணவன் உதித் சூர்யா வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேயே அம்மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.