1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dr Ramadoss warning about tamil name board

கடைகளில் ஒரு மாதத்திற்குள் தமிழ் பெயர்ப் பலகை வைக்காவிட்டால்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை

ramadoss
கடைகளில் ஒரு மாதத்திற்குள் தமிழ் பெயர் வைக்காவிட்டால் கருப்பு மையோடு வருவோம் என பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழ் சொற்கள் குறித்த தகவல்களை பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் கருப்பு மையோடும் ஏணியோடும் நாங்கள் வருவோம் என்று அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
குழந்தை இல்லைன்னா மதிக்க மாட்டாங்க..! திருப்பூர் குழந்தை கடத்தலில் திடீர் திருப்பம்!