செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified ஞாயிறு, 26 மார்ச் 2023 (11:44 IST)

குழந்தை இல்லைன்னா மதிக்க மாட்டாங்க..! திருப்பூர் குழந்தை கடத்தலில் திடீர் திருப்பம்!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சத்யா என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 7 நாட்கள் ஆகியிருந்த நிலையில் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தை திடீரென காணாமல் போனது. இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் ஒரு பெண் குழந்தையை கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து தொடர் விசாரணையை மேற்கொண்ட போலீஸார் குழந்தையை கடத்திய பாண்டியம்மாள் என்ற பெண்ணை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

குழந்தையை கடத்தியது குறித்து வாக்குமூலம் அளித்த பாண்டியம்மாள் தனக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்ததாகவும், அதனால் கர்ப்பமானது போல் நடித்து வந்த பாண்டியம்மாள் பிரசவத்திற்கு மருத்துவமனை செல்வது போல நாடகமாடி மருத்துவமனைக்கு வந்து குழந்தையை திருடி சென்றதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K