ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (21:06 IST)

இந்த இரண்டும் பா.ம.க.வின் கொள்கை: காமராஜரின் பிறந்த நாளில் ராம்தாஸ் டுவிட்

இந்த இரண்டும் பா.ம.க.வின் கொள்கை என காமராஜரின் பிறந்த நாளில் பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
பெருந்தலைவர் காமராஜருக்கு இன்று 119 -ஆவது பிறந்தநாள். ஏழைகளுக்கு மறுக்கப்பட்ட கல்வியை மீட்டெடுத்துக் கொடுத்து, படிக்கும் சமுதாயத்தை அமைக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்த மாபெரும் மக்கள் தலைவரை இந்த நன்னாளில் வணங்குவோம்....  போற்றுவோம்
 
கல்வியில் சிறந்த தமிழகத்தை அமைக்க வேண்டும் என்பது தான் காமராஜரின் நோக்கம். சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் கொள்கை. இவை இரண்டும் நிறைவேற வேண்டும்
 
கல்வியில் சிறந்த தமிழகத்தை படைப்பதும், அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை கட்டாயமாக வழங்குவதும் பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே சாத்தியம். அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக உழைக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்