வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (19:37 IST)

வெள்ளி வென்ற இந்திய வீரர் ரவிகுமார் தாகியாவுக்கு ராமதாஸ் வாழ்த்து

இந்தியாவின் ரவிக்குமார் தாகியா ஒலிம்பிக் குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவருக்கு பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ஏராளமான பரிசுகளும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி வென்ற ரவிக்குமார் தாக்கிய அவர்களது தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
டோக்கியோ ஒலிம்பிக் 57 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற  இந்திய வீரர் ரவிக்குமார் தாகியாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! அவரது சாதனைப்பயணம் தொடர வேண்டும். உலக அளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
 
 
ஏற்கனவே இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதற்கு ராமதாஸ் இன்று காலை வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே