புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (09:23 IST)

அம்பேத்கர் சிலை உடைப்பு – பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் !

வேதாரண்யம் பகுதியில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேதாரண்யம் பகுதியில் நேற்று ஒருவர் ஜீப்பில் வந்தபோது சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளார். இந்த விபத்து காரணமாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு அந்த காரை எரித்துள்ளனர் சிலர். இதனையடுத்து ஒரு பிரிவினர் அந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை உடைத்தனர். இதனை தடுக்க வந்த போலீசார் மீதும் போலீஸ் நிலையம் மீதும் கற்கள் வீசப்பட்டதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. காவலர்கள் வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சென்றுவிட்டதால் காவல்நிலையத்தில் இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதனையடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்குப் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சிலை உடைப்புக்கு பாமக நிறுவனர் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ‘நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அண்ணல் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவர். அவரது உருவச்சிலை சேதப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் யாரையும் சிறுமைபடுத்திவிட முடியாது. இப்போக்கு தடுக்கப்பட வேண்டும். அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

அண்மைக்காலங்களில் தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் யாரையும் சிறுமை படுத்தி விட முடியாது. இந்தப் போக்கு தடுக்கப்பட வேண்டும். அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் !’ எனத் தெரிவித்துள்ளார்.