நீலகிரியில் உடைக்கப்பட்ட மாதா சிலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு

Last Updated: சனி, 3 ஆகஸ்ட் 2019 (18:49 IST)
நீலகிரியில் மாதா சிலையை உடைத்த மர்ம நபரை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் எல்ஹில் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இன்று காலை ஊழியர்கள் வந்த போது மாதா சிலை உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த தேவாலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கபட்டது.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், தேவாலயத்துக்குள் நுழைந்த ஒரு வாலிபர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார்.

பின்னர் மாதா சிலை மற்றும் காரையும் அடித்து சேதப்படுத்திய காட்சியும் பதிவாகி உள்ளது. ஆனால் அந்த நபரின் உருவம் சரியாக தெரியவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :