வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 மார்ச் 2024 (08:10 IST)

6 முறை தென்காசியில் தோல்வி.. மீண்டும் அதிமுக கூட்டணியுடன் போட்டியிடும் கிருஷ்ணசாமி..!

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டு தோல்வியடைந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரும் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த சில ஆண்டுகளாக பாஜக ஆதரவுடன் பேசி வந்த நிலையில் தற்போது திடீரென அவர் அதிமுக கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணியில் இணைய அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தென்காசி தொகுதி தனக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர் அதிமுகவிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது

பாஜக கூட்டணியில் இணைந்து தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி  போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென அவர் அதிமுக கூட்டணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

1998 ஆம் ஆண்டு முதல் ஆறு முறை தென்காசி தொகுதியில் போட்டியிட்டு ஒரு முறை கூட வெற்றி பெறாத கிருஷ்ணசாமி இம்முறை வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva