வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (19:01 IST)

பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டி? வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பாஜக

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்களின் பட்டியலை முதற்கட்டமாக வெளியிட்டுள்ளது பாஜக. 

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
இந்த   நிலையில், சமீபத்தில்  பாஜக தலைவர் ஜேபி  நட்டா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்ததுடன், மக்களை தேர்தல் தொடர்பான அறிக்கைக்கு மக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடி, திருப்பூர் அருகேயுள்ள  மாதப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியிருந்தார்.
 
இந்த நிலையில், இன்று பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியானது.
 
அதன்படி,  மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்களின் பட்டியலை முதற்கட்டமாக வெளியிட்டுள்ளது பாஜக. 
 
அதில், பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். உள்துறை அமைத்ஷா காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.  தற்போது மத்திய  அமைச்சர்களாக இருக்கும்  34 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது பாஜக தலைமை.