1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 மார்ச் 2024 (16:05 IST)

பாஜக சார்பில் போட்டியிடுகிறாரா யுவராஜ் சிங். அவரே அளித்த விளக்கம்..!

yuvaraj sigh
பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் போட்டியிடப் போவதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்

வரும் ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலில் திரையுலக பரபலங்கள் கிரிக்கெட் பிரபலங்கள் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் யுவராஜ் சிங் சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்களை சந்தித்ததாகவும் இதனை அடுத்து அவர் பாஜகவில் இணைந்து பஞ்சாபில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட போவதாகவும் செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் இது குறித்து யுவராஜ் விளக்கம் அளித்த போது ’நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை, மக்களுக்கு உதவி செய்வதில் மட்டுமே எனக்கு ஆர்வம் உள்ளது. அதை எனது அறக்கட்டளை மூலம் அதை நான் மக்களுக்கு செய்வேன்.

அமைச்சர் நிதின் கட்காரி அவர்களை சந்தித்தது மரியாதை நிமித்தம் தான், நான் அரசியலில் ஈடுபட போவதில்லை என்று கூறியுள்ளார்


Edited by Mahendran