வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2024 (10:14 IST)

சென்னை ஆவடி அருகே சித்த மருத்துவர் படுகொலை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

சென்னை ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
சென்னை ஆவடியை அடுத்த மிட்டனமல்லி என்ற பகுதியில் சித்த மருத்துவர் ஒருவர் கடந்த பல ஆண்டுகளாக மருத்துவம் செய்து வந்த நிலையில் அவர் மற்றும் அவரது மனைவி நேற்று படுகொலை செய்யப்பட்டனர் 
 
இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை செய்த நிலையில் கொலை நடந்த இடத்தில் கொலைகாரர்களின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த செல்போன் கைப்பற்றப்பட்டதின் அடிப்படையில் மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 மேலும் சித்த மருத்துவரிடம் மருத்துவம் பார்க்க வந்த அனைவரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் பணம் மற்றும் நகைக்காக இந்த கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த கொலையை ஒரு கும்பல் செய்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் ஒட்டுமொத்த கும்பலையும் பிடித்து விடுவோம் என்று போலீசார் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
Edited by Mahendran