திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (08:55 IST)

காவல்துறையினர் சினிமா பிரபலங்களுடன் செல்பி எடுத்தால் நடவடிக்கை: மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

பணி நேரத்தில் சினிமா பிரபலங்களுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஏற்கனவே பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பிரமுகர்களை பாதுகாக்காமல் சினிமா பிரபலங்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கும் எடுப்பது வழக்கமாக உள்ளது. இதனை அடுத்து பணி நேரத்தில் சினிமா பிரபலங்களுடன் செல்பி மற்றும் போட்டோ எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார்

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கும் நேரத்தில் சினிமா பிரபலங்கள் முக்கிய பிரமுகர்கள் தலைவர்களுடன் புகைப்படம் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் ஆட்டோகிராப் வாங்குவது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் துறைரீதீலான  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே இந்த விவகாரத்தில் பெண் போலீஸ் ஒருவர் மீது நடவடிக்கை பாய்ந்து உள்ள நிலையில் அனைத்து காவல்துறையினருக்கும் தற்போது மாநகர காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva