1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (08:49 IST)

முகநூல் நட்பால் ஏற்பட்ட விபரீதம்.. காதலியை உயிருடன் கொளுத்த முயற்சித்த காதலன்..!

முகநூல் நட்பால் ஏற்பட்ட விபரீதத்தில் காதலியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி காதலன் கொளுத்த முயற்சித்த சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்பவரை முகநூல் மூலம் நட்புடன் பழகி வந்த நிலையில் இருவரும் திடீரென காதலராக மாறிவிட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் குணசேகர் திடீரென ராஜபாளையம் வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாண்டிச்செல்வியிடம் வலியுறுத்தியதாகவும், ஆனால் உடனே திருமணம் செய்ய முடியாது என்று பாண்டிச்செல்வி கூறியதாகவும் தெரிகிறது

இதனை அடுத்து ஆத்திரம் அடைந்த குணசேகர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து பாண்டிச்செல்வி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தலைமறைவாகிவிட்டார்

இதனை அடுத்து பாண்டிச்செல்வி யை காப்பாற்ற முயன்ற அவரது அக்கா பாண்டீஸ்வரிக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும் இது குறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் தலைமறைவாகியுள்ள குணசேகரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

முகநூல் நட்பால் ஏற்பட்ட விபரீதத்தால் காதலியை காதலனே உயிருடன் கொளுத்த முயன்ற சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva