1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (08:27 IST)

மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்த 2 பேர் கைது! போலீசார் அதிரடி!

உணவுப் பொருட்கள் மற்றும் அன்றாடம் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் டோர் டெலிவரி செய்து வரும் பழக்கத்தை பல நிறுவனங்கள் தற்போது செய்து வருகின்றனர். குறிப்பாக பிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட அனைத்துப் பொருள்களையும் டோர் டெலிவரி செய்து வருவதால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் வசதியாக உள்ளது
 
 
இந்த நிலையில் புதுச்சேரி மதுபாட்டில்களை வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்து வந்த இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருப்பனந்தாள் ஆகிய பகுதிகளில் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து ஒரு சில கடைகளுக்கும் மற்றும் போன் செய்து ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் டோர் டெலிவரி செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
 
 
இதனையடுத்து போலீசார் அதிரடியாக வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு நபர் இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு பெட்டியில் 50 மதுபாட்டில்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த மது பாட்டில்களை வாடிக்கையாளர்களுக்கும், சிறு கடைகளுக்கும் டெலிவரி செய்வது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் இன்னும் சிலர் மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்து வருவதாகவும் அவர்களும் விரைவில் பிடிபடிவார்கள் என்றும் கூறப்படுகிறது