வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2019 (14:34 IST)

பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் ’மனித எலும்புக் கூடு’ : பரபரப்பு தகவல்

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நகார்ஜூனா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் இவரது பண்ணை வீட்டில் ஒரு மனித எலும்புக் கூடு கிடைத்துள்ள  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஹாபப்நகர் மாவட்டத்தில் உள்ள பப்பிரெட்டிகுடா கிராமத்தில் நடிகர் நகார்ஜுனா 490 ஏக்கர் பண்ணை வீட்டை வாங்கியுள்ளார்.
 
இந்த வீட்டை நீண்ட காலமாக சுத்தம் செய்யாத நிலையில்,தன் வேலை ஆட்களை அனுப்பி அந்த பண்ணை வீட்டை சுத்தம் செய்யச் சொல்லி உள்ளார் நாகார்ஜூனா.
 
அங்கு சென்ற வேலையாட்கள், பண்ணைவீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு பழைய கட்டிடத்திலிருந்து ஒரு அழுகிய நாற்றம் அடித்துள்ளது. எனவே, வேலையாட்கள் அங்கு சென்று பார்த்த போது, அழுகிய நிலையில் ஒரு மனித உடல் கிடந்துள்ளதைப் பார்த்து அதிர்சியடைந்தனர்.
 
இதுகுறித்து, வேலையாட்கள் அந்த ஊரின் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் ,அவர் அந்த இடத்தை வந்து பார்த்துவிட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார், மனித உடலை மீட்டு  மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.