செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (16:08 IST)

வெடிக்காத துப்பாக்கி குண்டு: சிரிப்பாய் சிரித்த போலீஸின் நிலை!

பீகார் முதல்வரின் இறுதி சடங்கு நிகழ்வில் போலீஸார் ஒறுவனின் துப்பாக்கியில் இருந்த குண்டு வெடிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாந்த் மிஸ்ர கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி உயிரிழந்தார். 2 நாட்களுக்கு பிறகு நேற்று அவரது சொந்த கிராமத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது தகன நிகழ்வின் போது அரசு சார்பில் 22 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டது. 
 
எனவே, இதற்காக தங்களது துப்பாக்கிகளுடன் போலீஸார் குண்டை முழங்க தயாரான போது அதில் ஒருவரின் துப்பாக்கி குண்டு மட்டும் வெடிக்கவில்லை. இது வீடியோவாக சமூக வலைத்தளக்களில் கேலியாக பகிரப்பட்டு வருகிறது. 
 
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.