1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 17 நவம்பர் 2022 (08:00 IST)

சென்னையில் வேகமாக பரவு மெட்ராஸ்-ஐ: மருத்துவர்கள் எச்சரிக்கை

madras eye
சென்னையில் மெட்ராஸ்-ஐ என்ற நோய் வேகமாக பரவி வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
 
விழியையும் இமையையும் இணைக்கும் சவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸை  மெட்ராஸ்-ஐ என்று அழைக்கப்பட்டு வருகிறது. மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் மிக வேகமாக மெட்ராஸ்-ஐ பரவி வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் மெட்ராஸ்-ஐ  நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஐந்து நாட்களில் இது குணமடையும் என்றாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மெட்ராஸ் ஐ நோய் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva