1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 17 நவம்பர் 2022 (07:31 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம்?

petrol
கடந்த ஆறு மாதங்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என சற்றுமுன் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப இந்தியாவின் அண்டை நாடுகள் உள்பட அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றப்பட்டு வருகிறது 
 
ஆனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து 30 சதவீத சலுகை விலையில் வாங்கி குவித்து இருப்பதன் காரணமாக இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் சில மாதங்களுக்கு உயர வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva