திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2019 (19:13 IST)

மருத்துவர்கள் செலுத்திய ஊசி... நோயாளியின் இடுப்பிலேயே உடைந்த அதிர்ச்சி சம்பவம் !

கோவை மாவட்டம் குனியமுத்தூரை சேர்ந்த ஒரு இளைஞர் காய்ச்சலுக்காக, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு ஊசி செலுத்தி உள்ளனர். அது, இடுப்பிலேயே உடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் குனியமுத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 22 ஆம் தேதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக , கோவையில் உள்ள பிரபல மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
 
அங்குள்ள மருத்துவர்கள அவரைப் பரிசோதித்துவிட்டு, அவருக்கு டைபாய்டு காய்ச்சல் உள்ளதாகக் கூறி அவருக்கு ஊசி செலுத்தியுள்ளனர். அப்போது ஊசி உடைந்து அவரது இடுப்பிலேயே சிக்கியதாக தெரிகிறது.
 
இந்நிலையில், அவருக்கு உடலில் கடும் வலி ஏற்பட்டுள்ளது. எனவே அவர், வேறு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேசன் செய்துள்ளார்.
 
அதில், சுமார் 7 மி.மீ அளவு ஊசியின் முனை எலும்பில் சிக்கியுள்ளதாகத் தெரியவந்தது.
பின்னர், கோவை மருத்துவனையில் இந்த ஊசியை அகற்றுவதற்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.