வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (08:01 IST)

மயக்க ஊசியால் பிடிபட்ட அரிசிராஜா: 3 நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது

வனத்துறையின் பிடியில் சிக்காமல் கடந்த மூன்று நாட்களாக போக்கு காட்டிவந்த 'அரிசி ராஜா' என்ற யானையை ஒருவழியாக வனத்துறையினர் கடுமையாக போராடி மயக்க ஊசி போட்டு பிடித்தனர்
 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அர்த்தனாரி பாளையம், பருத்தியூர், கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களை அரிசிராஜா என்ற காட்டு யானை அழித்து வந்தது. மேலும் இந்த யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக பலியானார். இந்த யானை குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அரிசியை எடுத்து தின்பதில் ஆர்வம் கொண்டதால் இதற்கு 'அரிசி ராஜா' என அந்த பகுதியினர் பெயர் வைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வனத்துறையினர் இந்த யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
 
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வனத்துறையினர்களிடம் போக்கு காட்டி வந்த அரிசி ராஜா யானையை வனத்துறையினர் நேற்று நள்ளிரவில் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பொள்ளாச்சி அருகே மயக்க ஊசி மூலம் பிடிபட்ட அரிசி ராஜா யானையை லாரியில் வனத்துறையினர் ஏற்றியதாகவும் இனிமேல் அந்த பகுதி மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது