திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (20:26 IST)

பிரசவம் பார்த்த பின்... பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்த மருத்துவர்கள்

சில மாதங்களுக்கு முன், சாத்தூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் செலுத்தப்பட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ராமநாதபுரம் அருகே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தையல் ஊசியை வைத்து தைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்  மரவெட்டிவலசை என்ற பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி.இவரது மனைவி ரம்யா. இவர் கடந்த 19ஆம் தேதி, பிரவத்துக்காக  உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுமதிக்கப்பட்டார்.
 
அங்கு அவருக்குப்  பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 
அங்கு, ரம்யாவின் வயிற்றில் பிரசவம் பார்த்து விட்டு உள்ளே தையல் ஊசி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
 
இதனால், பெண்ணில் உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.