வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : சனி, 11 பிப்ரவரி 2023 (10:01 IST)

தவறானக் கருத்துகளை பரப்பிய மருத்துவர் ஷர்மிகா… விளக்கம் அளிக்க மேலும் அவகாசம்!

சமீபமாக யுட்யூப் சேனல் உள்ளிட்டவற்றில் பேசிவரும் டாக்டர் ஷர்மிகா தவறான மருத்துவ தகவல்களை வழங்குவதாக வெளியான குற்றச்சாட்டில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ட்ரோல்களுக்கு ஆளானா அவரின் பேட்டிகளில் பேசிய மருத்துவ தகவல்கள் அறிவியல்பூர்வமற்றதாகவும், அடிப்படை ஆதாரங்கள் அற்றதாகவும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உதாரணமாக நுங்கு தொடர்ந்து சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகம் பெரிதாகும், ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ உடல் எடை ஏறும் என எல்லாம் அவர் கூறியது மருத்துவர்களாலேயே கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.

அதை சுட்டிக்காட்டி பதிவிட்ட நெட்டிசன்களும், அலோபதி டாக்டர்கள் சிலரும் டாக்டர் ஷர்மிகா தவறான மருத்துவ தகவல்களை சொல்லி மக்களை தவறாக வழிநடத்துவதாக கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து தற்போது தவறான மருத்துவ அறிவுரைகளை வழங்குவதாக எழுந்த புகாரின் பேரில் உரிய விளக்கத்தை அவர் அளிக்க வேண்டுமென அவருக்கு இந்திய மருத்துவமுறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு பதிலளித்தார். மேலும், அவர் மீதான புகார்களின் நகல்கள் கொடுக்கப்பட்டு பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் எழுத்துப் பூர்வமான விளக்கமளிக்கக் கோரப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஆஜரான அவர் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் எழுத்துப் பூர்வமான விளக்கமளிப்பார் என சொல்லப்படுகிறது. அவருக்குக் கூடுதலாக 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  ஷர்மிகாவின் தாயார் டெய்சி, தம்ழ்நாடு பாஜகவில் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கிறார்.