திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (21:18 IST)

கமல் கூட சேர்ந்தா இருக்கிற வாய்ப்பையும் ராகுல் இழந்து விடுவார்: சுப்பிரமணியன் சுவாமி

subramaniya swamy
கமலஹாசனை ராகுல் காந்தி கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் அவருக்கு இருக்கிற வாய்ப்பும் போய்விடும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல் கலந்து கொண்டது குறித்து கேள்வி கேட்ட போது அவர் இந்த பதிலை அளித்தார்.
 
மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் பனி9ப்போர் குறித்து கேட்டபோது அவர்கள் இருவரும் இருக்கின்றார்களா? அதிமுக இருக்கின்றதா? என்று எதிர் கேள்வி கேட்டார். 
 
ஈபிஎஸ் ஓபிஎஸ்ஐ இணைத்து வைக்க அண்ணாமலை முயற்சி செய்கிறாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சுப்பிரமணியம் சாமி அண்ணாமலை என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியாது என்றும், அவரைப் பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்றும் தெரிவித்தார். சுப்பிரமணியசாமியின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran