புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:29 IST)

கொரோனாவால் இறந்த மருத்துவர் உடலை மறு அடக்கம் செய்ய தடை!

கடந்த ஆண்டு கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் அவர்களின் உடலை தோண்டி மறு அடக்கம் செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
கொரோனாவால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது என்பது சாத்தியமில்லை என்று இந்த வழக்கின் விசாரணையின் போது சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் விளக்கத்தை ஏற்று தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை உயா்நீதிமன்றத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவா் சைமனின் மனைவி ஆனந்தி தாக்கல் செய்த மனுவில், ‘சைமனின் உடலை எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்யக் கோரி சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை மனு சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
 
இதனையடுத்து சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனது கணவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’ என கோரி மருத்துவர் சைமன் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுமீதான தீர்ப்பு தான் இன்று வெளிவந்துள்ளது.