புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:21 IST)

இனிமே இங்கே காலந்தள்ள முடியாது… ஷங்கர் பாலிவுட் செல்ல இதுதான் காரணமா?

இயக்குனர் ஷங்கர் அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களை இயக்க சென்றுள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக ஷங்கர் இருந்தார். ஆனால் எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்குப் பின்னர் அவர் படங்கள் வெற்றி பெற்றாலும் தனது புகழை இழக்க தொடங்கினார். அவரின் ஐ மற்றும் 2.0 ஆகிய படங்கள் கிட்டத்தட்ட தோல்வி படங்களாகவே கருதப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்களின் வரவுக்குப் பின்னர் ஷங்கர் படங்களில் பேசப்படுகின்ற அரசியலை கேலி செய்யும் போக்கு ஆரம்பித்துள்ளது.

இப்போது அவர் இயக்கும் இந்தியன் 2 படமும் சிக்கல்களுக்கு ஆளாகி ஓராண்டாக முடங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்து ராம்சரண் நடிப்பில் ஒரு தெலுங்கு படம் மற்றும் ரண்வீர் சிங் நடிப்பில் ஒரு பாலிவுட் படம் என கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை விட்டு விலக ஆரம்பித்துள்ளார்.