செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (11:37 IST)

கொரோனா தாக்கல்... சென்னையில் 36 விமான சேவைகள் ரத்து !

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் மொத்தம் 36 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

 
நாடு முழுவதும் ஒருநாள் பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமான நிலையில், தமிழகத்தில் தினசரி பாதிப்பு 8,000-த்தை நெருங்கிய நிலையில் தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக நாளை ஆலோசனை நடத்தப்படவுள்ளதாம்.  கொரோனா வைரஸ் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகின்றன. 
 
கொரோனா வைரஸ் பரவலால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து இன்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 18 விமானங்களும், அதைப்போல் சென்னைக்கு வரும் 18 உள்நாட்டு விமானங்களும் மொத்தம் 36 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.