திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sinoj
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2023 (13:14 IST)

2026 -ல் விஜய் வென்றதுபோல் போஸ்டர்- ரசிகர்கள் செயலால் பரபரப்பு

vijay fans poster
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்பு அதிகரித்துள்ளது.   இப்படம் வசூல் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சமீபத்தில், தன் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்திய நிலையில், அவ்வப்போது, மக்கள் இயக்க மகளிரணி, வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கு தனித்தனியே ஆலோசனை கூட்டம்  நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இது விஜய்யின் அரசியல் வருகைக்கான முன்னேற்பாடுகள் என்று கூறப்படும் நிலையில், '' மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்,2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது….மத்தியில் மோடியின் நல்லாட்சி, மா நிலத்தில் விஜய்யின் மக்களாட்சி, தொலைபேசியில் பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்து…தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்தது. கூட்டணி கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி''. என்று மதுரை தெற்கு மாவட்ட  கொள்கை பரப்பு தலைமை தளபதி  மக்கள் இயக்கத்தினர்  குறிப்பிட்டுள்ளனர்.

இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.