1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 2 மே 2019 (18:51 IST)

தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் - ஸ்டாலின் உறுதி

நாட்டில் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்றுவருகிறது. இதில் ஐந்து கட்டதேர்தல் சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்நிலையில் ஆறாவது கட்டதேர்தல் வரும் 12 வது தேதி ஹரியானாவில் நடைபெறவுள்ளது. 
இந்நிலையில் தமிழகத்தில் மக்களைவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. வரும் 19 ஆம் தேதி மீதி சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 
 
இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு அனைத்துக் கட்சிகளும் தீயாய் உழைத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து ஸ்டாலின் 3 வது நாளாக இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 
 
அப்போது அவர் கூறியதாவது : 
 
உப்பள தொழில்சங்கத்தினர் உட்பட தொழிலாளர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை முழுமையாக அதிமுக அரசு நிறைவேற்றவில்லை.  ஆட்சியை தக்கவைக்கவே அதிமுக போராடுகிறது. ஏற்கனவே 97 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ள திமுக இடைத்தேர்தல்களில் வெற்றி வெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.