1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 25 ஜூன் 2016 (17:00 IST)

திமுகவின் வெற்றிக்கு நாங்க தான் காரணம்: உரிமை கொண்டாடும் காங்கிரஸ்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் ஆட்சியை திமுக கூட்டணி கைப்பற்றாவிட்டாலும், வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்தது.


 
 
இந்த தேர்தலில் திமுக 89 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றியது. இந்நிலையில் திமுகவின் இந்த வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
 
புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய அவர் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தான் காரணம். காங்கிரஸ் இல்லாவிட்டால் திமுகவினால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசல்கள் குறித்து ஆலோசித்து தீர்க்க வேண்டும் என கூறினார்.